கீர்த்திசுரேஷ் நடிக்கும் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாகவும் பிரபல முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா போன்ற பிரபலங்களுடன் நடித்தவருமான கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தசரா’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

திரையுலகில் பிரபல தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிய ’தசரா’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் மார்ச் 30ஆம் தேதி தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Keerthyy suresh, Dasara, Nani, 18th Mar 2023

ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் இந்த படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் அதாவது 156 நிமிடங்கள் ரன்னிங் டைமாக கொண்டது என்றும் தெரியவந்துள்ளது.

65 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த்துள்ளதுடன் சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், சாய்குமார் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.