Aparna Das – 18 March 2023 – ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அபர்ணா தாஸ் 10 செப்டம்பர் 1995 இல் ஓமானின் மஸ்கட் நகரில் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு ஃபஹத் ஃபாசிலின் மலையாளத் திரைப்படமான யான் பிரகாஷன் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.
இவர் 2019 இல் வினீத் ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து மனோகரம் என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடித்த மற்றொரு மலையாளத் திரைப்படம் ப்ரியன் ஓட்டத்திலானு ஆகும். இவர் தமிழில் அறிமுகமான பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இவர் அதில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோருடன் நடித்துள்ளார்.
அபர்ணா நடித்து வெளிவந்த திரைப்படம் தாதா. இதில் பிக் பாஸ் புகழ் கவினுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் பெரும் வசூலைப் பெற்றது. அவர் 2021 இல் நீயம் நிழலில் (மலையாளம்) என்ற மியூசிக் வீடியோவிலும் நடித்திருந்தார்.