டாடா வின் வெற்றி – சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்

நடிப்பு துறையில் வலம் வரும் நடிகர் கவினுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்.

சின்ன வேடங்களில் படங்கள் நடித்து, தொடரில் நடித்து பின் பிக்பாஸில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தில் இருந்த வந்த கவின் டாடா படத்தின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் கவின் தன்னுடைய அடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரூ. 1 கோடிக்கும் மேல் தன்னுடைய சம்பளத்தை கவின் உயர்த்திவிட்டாராம்.

கவின் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்றும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.