காஸ்மீரில் இருந்து கிளம்பிய சஞ்சய் தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜயுடன் பல பிரபலங்களின் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக காஷ்மீரில் நடைபெற்று வருகின்ற நிலையில் சமீபத்தில் சஞ்சய்தத் இணைந்தார் என்பதும் அவர் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்து வருகிறார் என்றும் விஜய்-சஞ்சய்தத் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

Logesh Kangaraj, Sanjai Dutt, Vijay, Leo, 17th Mar 2023

இந்த நிலையில் சஞ்சய் தத் காஷ்மீர் படப்பிடிப்பில் தனது காட்சியை முடித்துவிட்டு கிளம்பிய நிலையில் அவரை படத்தின் தயாரிப்பாளர் லலித் மற்றும் விஜய்யின் மேனேஜர் வழியனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த டுவிட்டர் பதிவில் ’சஞ்சய் தத் அவர்களுடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம், மிகவும் எளிமையான இனிமையான மனிதர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த கட்டமாக சென்னை படப்பிடிப்பில் உங்களை சந்திக்கிறோம் என்றும் மீண்டும் சந்திப்போம் சார் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.