’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நம்பப்படுகின்றது.

இந்தநிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் படக்குழுவினர் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது முதல் புரமோஷன் தேதியை அறிவித்துள்ளனர். இந்தநிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடலான ‘அகநக’ என்ற பாடல் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்த பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.
மேலும் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலரும் நடித்துள்ளனர்.