வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மேலும் ‘வாத்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமல்லாமல் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்று ‘வாத்தி’ ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘வாத்தி’ படத்தின் டெலீட்டட் சீன் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த டெலீட்டட் சீனில் பள்ளியில் நடக்கும் விழா ஒன்றில் இந்தியாவிலேயே முதல் மாணவனாக வந்த மாணவரை பேச விழாக்குழுவினர் அழைக்கின்றனர். அப்போது அந்த மாணவர் பேச வரும்போது தன்னுடைய கோச்சிங் சென்டரால்தான் அந்த மாணவர் முதல் இடத்தில் வந்தார் என்பதை கூற வேண்டும் என சமுத்திரகனி மறைமுகமாக அந்த மாணவருக்கு கூறுகிறார்.
ஆனால் அந்த மாணவர் சமுத்திரக்கனி தந்த கடிதத்தை கிழித்து போட்டுவிட்டு ’நான் இந்தியாவிலேயே முதல் மாணவராக வருவதற்கு காரணம் பாலமுருகன் சார் தான்’ என கூற உடனே தனுஷின் முகம் தெரிகிறது. இந்த டெலிடட் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.