ஹாலிவுட் படத்தில் இருந்து விஜய் கதாபாத்திரத்தை சுட்ட லோகேஷ் கனகராஜ்?

மாநகரம், கைதி படங்களின் வெற்றியின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் எனும் படத்தை இயக்கி, விஜய்யின் கேரியரில் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைத்திருந்தார்.

இதில் முழு நேர குடிகாரனாக நடித்திருந்தார் நடிகர் விஜய். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த இந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் படத்தில் இருந்து தான் லோகேஷ் காப்பியடித்துள்ளார் என கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் ஜானி டெப் நடித்து 2018ஆம் ஆண்டு வெளிவந்த the professor படத்தில் இடம்பெறும் ஜானி டெப்பின் கதாபாத்திரம் கூட கல்லூரியில் வேலை பார்க்கும் professor முழு நேர குடிகாரனாக தான் இருப்பார்.

இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர் the professor படத்தில் வரும் ஜானி டெப்பின் கதாபாத்திரத்தை காப்பியடித்து தான் மாஸ்டர் படத்தில் விஜய் கதாபாத்திரத்தை லோகேஷ் உருவாக்கியுள்ளார் என தெரிவித்து வருகின்றனர்.

Lokesh Kanagaraj played the character from the Hollywood film