கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து 30ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 18ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை தான் பார்த்ததாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார். இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ‘பத்து தல’ படம் பார்த்தேன், படம் மிகவும் பிடித்திருக்கிறது, பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் உடன், நல்ல எமோஷன்களுடன் இந்த படம் உருவாகியுள்ளது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பு கிருஷ்ணாவின் மேக்கிங் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் மிகவும் அருமையாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ‘பத்து தல’ படத்தின் முதல் விமர்சனமே பாசிட்டிவாக வந்ததை அடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.