தமிழ் திரையுலகில் இன்னொரு மைல்கல்லை எட்டும் நடிகை சிம்ரன்

கடந்த 2000 ஆண்டுகளில் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். ரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் தமிழில் அவருடைய ஐம்பதாவது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Simran, Saptham, Arivalakan, 16th Mar 2023

இந்த நிலையில் பிரபல இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சப்தம்’ என்ற படத்தில் நடிகை சிம்ரன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழில் அவரது 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7ஜி பிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் லட்சுமி மேனன், லைலா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துவரும் நிலையில் தற்போது சிம்ரன் இந்த படத்தில் இணைந்து உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.