இதெல்லாம் வேற யாருடனும் வச்சிருக்கணும் – வடிவேலுவை கோபத்துடன் எச்சரித்த பிரபல இயக்குனர்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்தில் நடிக்க மறுத்து விலகினார். இதனால் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2021-ல் தடை நீக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்தார். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்தார். உதயநிதியின் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2-ம் பாகம் படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுக்கும் பி.வாசுவுக்கும் இடையே ஒரு பிரச்சினையில் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் வடிவேலுவின் நடவடிக்கையில் கடுப்பான பி.வாசு வடிவேலுவிடம் ‘இதெல்லாம் வேற யாருடனும் வச்சிருக்கணும், நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் சென்று விடலாம்’ என்று தெரிவித்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இருந்தும் தற்போது வடிவேலு மூத்த இயக்குனர் என்பதால் அடக்கி வாசிப்பதாகத் தெரிவிக்கப்டுகிறது.