நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்

நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அஞ்சலி நடிகர் ஜெய்யை காதலிப்பதாக பல செய்திகள் வெளிவந்தது ஆனால் இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அஞ்சலி பிரபல இயக்குனரை திருமணம் செய்ய போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. அதட்கும் அஞ்சலி மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் அஞ்சலி தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Actress Anjali to get married soon - information about the groom