தோழிகளுடன் சேர்ந்து புகைப்பிடித்துள்ள நடிகை அனன்யா பாண்டே – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் நடிகை அனன்யா பாண்டே, கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர்.

முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார். அதன்பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.

ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை. தற்போது அனன்யா பாண்டே குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை அனன்யா பாண்டே தனது தோழிகளுடன் சேர்ந்து புகைபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Actress Ananya Pandey smoking with her friends - the photo that stirred controversy