தல மற்றும் தளபதி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை

தல மற்றும் தளபதியுடன் நடிக்கவேண்டும் என்ற கனவு திரையுலக நடிகைகளுக்கு இருந்து வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் விஜய், அஜித் ஆகிய இருவருடனும் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vijay, Ajith, Saipallavi, 15th Mar 2023

கடந்த பொங்கல் தினத்தில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மஞ்சுவாரியார் கேரக்டருக்கு முதலில் சாய்பல்லவியிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அந்த கேரக்டரில் தன்னால் நடிக்க முடியாது என்று சாய்பல்லவி கூறியதாக தகவல் வெளியகியுள்ளது.

Vijay, Ajith, Saipallavi, 15th Mar 2023

அதே போல் தற்போது விஜய் நடித்துவரும் ’லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா நடித்து வரும் கேரக்டரில் நடிக்க முதலில் சாய்பல்லவியிடம் தான் அணுகப்பட்ட நிலையில் அவர் இதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் த்ரிஷா தற்போது நடித்துவரும் கேரக்டரில் முக்கியத்துவம் இல்லை என்றும் அதனால் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்றும் சாய்பல்லவி கூறியதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தற்போது நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.