ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
தற்போது வந்துள்ள செய்தியில் ’லால் சலாம்’ திரைப்படத்தில் பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எஜமான், அருணாச்சலம், முத்து, வீரா, படையப்பா உள்பட பல திரைப்படங்களில் இணைந்து நடித்த செந்தில் தற்போது நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டு கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக உள்ளது. மேலும் ரஜினியின் தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.