தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இயக்குனர் அட்லீ. விஜய் – அட்லீ கூட்டணி இதுவரை தோல்வியை தழுவியதே இல்லை. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்தவர் அட்லீ.
எப்போது மேடை ஏறினாலும், என்னுடைய அண்ணன் என்னுடைய தளபதி விஜய் என்று கூறுபவர் இயக்குனர் அட்லீ. அந்த அளவிற்கு விஜய்யுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதே அக்டோபர் மாதத்தில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது. மேலும் இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகவும் வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள்வெளிவந்துள்ளன.
தன்னுடைய அண்ணன் விஜய் என்று அட்லீ கூறிவரும் நிலையில் விஜய் படத்துடன் தனது படம் மோதும் நிலை உருவாகியுள்ளமை அட்லீக்கு தர்ம சங்கடத்தை ஏட்படுத்தியுள்ளது.
