சமீபத்தில் இருந்து நடிகர் விஜய்க்கு விவாகரத்து ஆகிவிட்டது என்றும், அவருடைய மனைவி தனது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை விஜய் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூட கூறப்பட்டது.
ஆனால், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். இவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில் இதை தொடர்ந்து புதிதாக சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விலைஉயர்ந்த கார் ஒன்றை நடிகர் விஜய் பரிசாக கொடுத்துள்ளாராம். இந்த விஷயம் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கும் தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஷயத்தை பிரபல திரைப்பட விமர்சகரும், சென்னார் குழுவை சேர்ந்தவருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆனால், இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. இது பொய்யான பதிவு என தெரியவந்துள்ளது. விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களை தாக்கியும், அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் தவறாகவும் சித்தரித்து தொடர்ந்து இவர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக உமைர் சந்து இப்படி பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என தெரிவிக்கப்டுகிறது.
