சாகுந்தலம் படத்தை திரையில் பார்த்தபின் சமந்தா சொன்னவை….

திரையுலகில் பிரபல நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தினை நடிகை சமந்தா, தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் குணசேகரன் ஆகிய இருவருடனும் இணைந்து ‘சாகுந்தலம்’ படத்தை பார்த்தார். இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவொன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘ கடைசியாக இன்று நான் ’சாகுந்தலம்’ திரைப்படத்தை பார்த்தேன். இயக்குனர் குணசேகரன் அவர்கள் இடம் என் இதயமே சென்று விட்டது. என்ன ஒரு அழகான திரைப்படம். நம் மிகப்பெரிய காவியங்களில் ஒன்றை அவர் கண்முன் உயிர்ப்பித்துள்ளார். குடும்ப பார்வையாளர்கள் இந்த படத்திற்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

குழந்தைகளாக நீங்கள் அனைவரும் இந்த மாயாஜால உலகத்தை விரும்பி பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். தில் ராஜு மற்றும் நீலிமா குணசேகர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க எனக்கு அற்புதமான வாய்ப்பளித்ததற்கு நன்றி, ‘சாகுந்தலம்’ என்றென்றும் என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று ஆவலாக உள்ளனர்.