கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் கார்ரெட் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ட்விட்டர் பதிவை நடிகர் பெனடிக்ட் கார்ரெட் அதிரடியாக நீக்கியுள்ளார்.
Follow @BenedictGarrett