கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் இம்மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த ட்ரைலரில் நடிகர் ஜெயம் ரவி சரக்கு கப்பலில் கண்டெய்னர் ஏற்றும் நிறுவனத்தில் செய்யும் சட்டவிரோத செயல்கள், அதை பிடிப்பதற்காக அகிலனை என்கவுண்டரில் சுட்டு தள்ள முயற்சி செய்வதற்காகவும் காவல்துறை அதிகாரியாக பிரியா பவானி சங்கர் எடுக்கும் நடவடிக்கை தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கேரக்டரில் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்துள்ளார். நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரேஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், மதுசூதன் ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் சென்சாரில் ‘யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.