சில மணி நேரங்களில் மில்லியன் பார்வைகளை கடந்த ‘பத்து தல’ டீசர்

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக்கின் அதிரடியான நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரைலரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு சரியான விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் சிம்புவின் பின்னணி குரலில் வெளியாகி உள்ள இந்த டீசரின் காட்சிகள் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆவேசமாக தோன்றும் காட்சிகள் என்பன இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளன.

இந்த டீசர் நிச்சயம் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் அட்டகாசமான பின்னணி இசை, பரூக் பாஷாவின் ஒளிப்பதிவில் உருவாகிய இந்த படத்தில் சிம்பு கௌதம், கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் ன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 4 மணி நேர இடைவேளையில் மில்லியன் பார்வைகளை டீஸர் கடந்துள்ளது.