வித்தியாசமான காமெடி கதை அம்சம் கொண்ட ‘குடிமகான்’ டிரைலர்..!

Vijay Sivan, Shantini, Kudimahan, 27th Fb 2023

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் இயக்கத்தில் விஜய் சிவன், சாந்தினி தமிழரசன் நடித்த ’குடிமகான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்த ட்ரைலரில் குடிப்பழக்கம் இல்லாமலே தானாகவே போதை ஏறும் ஒருவனின் உடலில் உள்ள ரகசியம் என்ன என்பதை அறிய குடிமகன்கள் அவரை சுற்றி சுற்றி வளைப்பதை காமெடியாக இயக்குனர் எடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான காமெடி கதை அம்சமுள்ள இந்த படத்தில் விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, சேதுராமன், நமோ நாராயணன், கதிரவன், ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார்.