முற்றிலும் திரில் கதையம்சம் கொண்ட உதயநிதியின் கண்ணை நம்பாதே ட்ரைலர்!!!

நடிகர் மற்றும் இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் மிகப் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரைலரில் திரில் மற்றும் சஸ்பென்ஸ் கதை அம்சம் கொண்ட காட்சிகளும் அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலினின் பின்னணி குரலோடு வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லர் நிச்சயம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மு மாறன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா, சதீஷ், மாரிமுத்து, பழ கருப்பையா, சென்றாயன், கு.ஞானசம்பந்தம் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் உதயநிதி ஸ்டாலினின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.