பிரஷாந்த் நடிக்கும் படத்தில் சூப்பர் சிங்கர் பாடகர் பாடிய பாடல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. உமாதேவி எழுதிய இந்த மெலடி பாடலை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்ய விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆதிக் என்பவர் பாடியுள்ளார்.

தியாகராஜன் இயக்கியுள்ள இப் படத்தில் பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா, ஆகியோர் நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவில், சதீஸ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது.