மாறுபட்ட கதையம்சம் கொண்ட ஆண்ட்ரியாவின் ‘நோ எண்ட்ரி’ டிரைலர்..!

அழகு கார்த்திக் இயக்கத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த ‘நோ எண்ட்ரி’ என்ற படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரைலரில் ஆண்ட்ரியா மற்றும் அவரது குழுவினர் காட்டிற்கு ஆய்வுக்காக செல்லும் போது வேட்டை நாய்களால் சூழப்படுகின்றனர். அவர்களிடமிருந்து ஆண்ட்ரியா மற்றும் குழுவினர் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகின்றது.

வேட்டை நாய்கள் குறித்து நிறைய ஆய்வு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், ரான்யா ராவ், மனஸ், ஜெயஸ்ரீ, ஜான்வி உள்பட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் டிரைலரில் உள்ள திரில்லர் காட்சிகளை பார்க்கும்போது நிச்சயம் த்ரில் பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.