தமிழ் திரையுலகில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது இளம் பெண்ணாக மாறிய நிலையில் முதல் படத்திலேயே மது அருந்துதல், படுக்கை அறை காட்சிகள், லிப்லாக் முத்தம் போன்ற காட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் மட்டுமன்றி மலையாள படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரது மனதை கவர்ந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். இந்தநிலையில் குறிப்பாக அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தில் இவரது நடிப்பிற்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளம்பெண்ணாக மாறியுள்ள அனிகா சுரேந்திரன் சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள நிலையில் தற்போது ’ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளது ட்ரைலரிலிருந்து தெரியவருகிறது. இந்த ட்ரெய்லர் வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் அனிகாவை நாங்கள் குழந்தையாக தான் பார்க்கிறோம், ஆனால் அவர் இப்படி நடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.