கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய், மோகன்லால் நடிப்பில் நேசன் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக உருவான திரைப்படம் ’ஜில்லா’. இந்த படம் அஜித் நடித்த ’வீரம்’ படத்துடன் இணைந்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ‘ஜில்லா’ திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் இயக்குனர் நேசன் அதன் பிறகு வாய்ப்புகள் எதையும் பெறவில்லை. இந்த நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனது நண்பர் நேசன் விஜய்க்காக ஒரு அருமையான ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டால் நிச்சயம் விஜய் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நேசன் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.