மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளி வந்துள்ள தகவலில் ’அஜித் 62’ திரைப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும் இது குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் திரைப்படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ விஜய் நடித்த ’பைரவா’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் முதல் முதலாக அஜித் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருப்பதை அவர் சரியாக பயன்படுத்துவார் என்றும் அஜித் ரசிகர்களை முழுமையாக அவர் திருப்தி செய்வார் என்றும் கூறப்படுகின்றது.