பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தில் இடம் பெற்ற ’உன்னோட நடந்தா’ என்ற பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய இந்த பாடலை சுகா எழுதி உள்ளார் என்பதும் தனுஷ் மற்றும் அனன்யா பட் ஆகிய இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மெலடி பாடலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது மனதை கவரும் வகையில் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.