நடிகர் பிரபாஸுக்கும் பிரபல நடிகைக்கும் மாலாத்தீவில் நிச்சயதார்தம்?

பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி வெற்றியை அடுத்து இவர் நடித்த படங்கள் யாவையும் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை என்பது தெரிந்ததே.

Prabhas, 07th Feb 2023

இந்தநிலையில் தற்போது சலார் மற்றும் ஆதி புருஷ் ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்தநிலையில் ஆதி புருஷ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கிருதி சானோன் நடிகர் பிரபாஸுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் என்றும் ஒரு செய்தி சமீபத்தில் கசிந்துள்ள நிலையில் பின்னர் அது உண்மையில்லை என்பது போல் அதன்பின் தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், பாலிவுட் திரைப்பட விமர்சகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிரபாஸுக்கும் நடிகை கிருதி சானோனுக்கும் மாலாத்தீவில் நிச்சயதார்தம் என்று பதிவு செய்துள்ளார்.

Prabhas, 07th Feb 2023

இவருடைய இந்த பதிவு தற்போது காட்டுதீபோல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.