லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்கு விஜய் உடன் சென்றிருந்த த்ரிஷா 3 நாட்களிலே சென்னை திரும்பி விட்டதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தில் த்ரிஷாவுக்கு சின்ன கேரக்டர் தான் என்றும் அவரது கேரக்டரை லோகேஷ் கனகராஜ் கொன்றுவிட்டார் என்றும் பிரியா ஆனந்த் தான் இந்த படத்தின் நிஜ நாயகி என்றும் நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது காஷ்மீர் படப்பிடிப்பிலிருந்து த்ரிஷா இன்னும் திரும்பவில்லை என்றும் தற்போது அவர் காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பில் தான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து த்ரிஷா சென்னை திரும்பியதாக வெளிவந்திருக்கும் வீடியோ பழையது என்று தெரிய வந்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வருகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவு ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.