சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாக்கி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’சூர்யா 42’. தமிழ் ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வெளியான பின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த படத்தில் சூர்யா மிகவும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திஷா பதானிக்கு ஸ்டண்ட் காட்சிகளும் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சண்டைக்காட்சி ஒன்றில் திஷா பதானி சுழன்று சுழன்று பறந்து பறந்து அடிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை அவரது 56 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் ரசித்து வருகின்றனர் என்பதும் அதில் ஒருவர் நடிகை சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.