சிம்பு மற்றும் தனுஷ் பட நடிகையுடன் இணையும் சந்தானம்

தனுஷ் மற்றும் சிம்பு படத்தில் நடித்த நடிகை தற்போது சந்தானம் நடிக்கவுள்ள திரைப்படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

திரையுலகில் காமெடி நடிகராக இருந்து தற்போது நாயகனாகவும் நடித்து வரும் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாகவும் அவர் இந்த படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் பட குழுவினர் தெரிவித்த்துள்ளனர். நடிகை மேகா ஆகாஷ் சிம்பு நடித்த ’வந்தா ராஜாவாக தான் வருவேன்’, தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேகா ஆகாஷ் இந்த படத்தில் இணைந்துள்ளது குறித்து இயக்குனர் கார்த்திக் கூறியபோது, ‘இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய டாக்டர் கேரக்டருக்கு பல நடிகைகளை பரிசீலனை செய்ததாகவும் தற்போது மேகா ஆகாஷ் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என கருதி அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்டது என்றும் 1960 ஆம் ஆண்டில் நடைபெறும் சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.