கடந்த சில ஆண்டுகளாக விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இந்தநிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தற்போது ’துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல் விக்ரம் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.