தனுஷ் நடித்து முடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது படம் குறித்த செம அப்டேட்டை பட குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வருகின்ற 17ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வாத்தி’ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘வாத்தி’ ட்ரைலர் பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவிருக்கும் இந்த ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் தனுஷ், சம்யுக்தா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தனுஷூக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என கூறப்படுகின்றது.