ராஜேஷ் முருகேசன் இசையில் ரமணன் புருஷோத்தமா என்பவர் இயக்கத்தில் பாபி சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்த ’வசந்த முல்லை’ என்ற திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

பாபி சிம்ஹா, காஷ்மீரா நடிப்பில் உருவான இந்த படம் முழுக்க த்ரில் கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாபி சிம்ஹா மற்றும் காஷ்மீரா ஆகிய இருவரும் மர்மமான இடத்தில் அறை எடுத்து தங்குகின்றனர். இந்த நிலையில் திடீரென அங்கு நடக்கும் மர்மமான சம்பவங்கள், திகில் அனுபவங்கள் குறித்த கதை அம்சம் கொண்டதுதான் ’வசந்த முல்லை’ படத்தின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் திரில் கதை அம்சம் உள்ள ’வசந்த முல்லை’ திரைப்படம் ரசிகர்களை கவரும் என்று நம்பப்படுகின்றது.