‘பொம்மை நாயகி’ படத்தின் வெற்றியை அடுத்து யோகிபாபு நடிக்கவிருக்கும் அடுத்த படம்

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராகவும் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துவரும் யோகி பாபு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் யோகி பாபு நாயகனாக நடித்த ’பொம்மை நாயகி’ என்ற படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ’லக்கி மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கார்த்திக் நடித்த படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. சீன் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, ஹலோ எப்.எம் பாலாஜி, ‘துணிவு’ வீரா, அப்துல் லீ, ராய்ச்சல் ரெபாகா உள்ளிட்ட பல நடிக்கவுள்ளனர்.

மேலும் இந்த படத்தை திங்க் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.