கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடித்த ‘டாடா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இரண்டு நிமிடத்திற்க்கு மேல் இருக்கும் இந்த ட்ரைலரில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் இடையே ஏற்படும் காதல் காரணமாக திடீரென அபர்ணா தாஸ் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விடுகிறார். அதன் பிறகு ஏற்படும் குழப்பங்கள் திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகிய இருவருமே ரொமான்ஸ் மட்டுமின்றி சென்டிமென்ட் காட்சிகளிலும் நடிப்பில் அசத்தியுள்ளனர். இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜென்மார்ட்டின் இசையில் எழிலரசு ஒளிப்பதிவில் கதிரேஸ் அழகேசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதனால் இந்த படம் நல்ல விளம்பரத்தை பெற்று வருகிறது. கவின் நடித்த ’லிப்ட்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகின்றது.