ஜான்வி கபூரின் கொழுக் மொழுக் அழகின் ரகசியம் இதுதானாம்!!!

திரையுலகில் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் வுமன் சென்ட்ரிக் படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.

Jahnvi Kapoor, 02nd Feb 2023

மேலும் ஜான்வி கபூர் அவர்கள் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளவர். படங்களை விட இன்ஸ்டாகிராமில் ஜான்வி வெளியிடும் போட்டோக்கள் தான் அதிகம் வைரலாகிறது. அதற்கு காரணம் அவர் எல்லைமீறிய கவர்ச்சி காட்டுவது தான் என்றும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் தற்போது ஜான்வி அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் அவருக்கு இருக்கும் ஒரு பழக்கம் பற்றி பேசி இருக்கிறார். அதாவது காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவேன் என கூறி இருக்கிறார். அது தான் அவரது அழகின் ரகசியமாம் இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.