தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகரில் ஒருவர் சரத்குமார். வில்லன், ஹீரோ என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் துணை கதாபாத்திரங்களிலும் தற்போது நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் வம்சி இயக்கத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தற்போது சரத்குமார், ராகவா லாரன்ஸ் ‘ருத்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தநிலையில் படத்தின் ஷூட்டிங்கின் போது சரத்குமார், “இரவு 11 மணிக்கு மேல் என்னால் நடிக்க முடியாது” என்று ராகவா லாரன்ஸிடம் கூறியுள்ளார்.
ஆனால் படத்தின் குறிப்பிட்ட காட்சியை அமைக்க 11 மணிக்கும் மேல் ஆகியுள்ளது. இதனால் கோபம் அடைந்த சரத்குமார் யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பின் போது பாதியில் சென்றுவிட்டாராம் இதை கேள்வி பட்ட லாரன்ஸும் கோபத்தில் வீட்டிற்கு சென்று விட்டதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.