’தளபதி 67’ படத்தின் தகவல்கள் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாமல் வெளிவந்து விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய நிறுவனங்களின் தகவல்களை அடுத்தடுத்து பட குழுவினர் வெளியிட்டனர்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’தளபதி 67’ படத்தின் டைட்டில் வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து ’தளபதி 67’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’நாங்கள் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம் என்று கூறி ’தளபதி 67’ படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் ‘தளபதி 67’ படம் அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.