லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்தநிலையில் இந்த படத்தில் ’கேஜிஎப் 2’ படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் இந்தப்படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க இருக்கும் நிலையில் அவரது சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் ‘தளபதி 67’ படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் சஞ்சய்தத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ’கேஜிஎப் 2’ படத்தில் வில்லனாக நடித்த போதும் இதே தொகை தான் சம்பளம் வாங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

சஞ்சய்தத் மட்டுமில்லாமல் இந்த படத்தில் கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதால் அவர்களுக்கும் பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மொத்த த்தில் விஜய் உள்பட படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பளம் மட்டுமே 200 கோடியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.