தமிழ் திரையுலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் நடந்த பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் காயம் அடைந்த நிலையில் அவர் தற்போது தனது உடல்நிலை குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

விஜய் ஆன்டனி அவர்கள் காயமடைந்து மலேசியாவில் சிகிச்சை பெற்ற அவர் சென்னைக்கு வந்து தனது சிகிச்சையை தொடர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் விரைவில் தனது உடல்நிலை குறித்து அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்து கூறியிருப்பதாவது:
அன்பு இதயங்களே
— vijayantony (@vijayantony) February 2, 2023
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏
அன்புக்கு நன்றி