திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்கள் சூர்யா மற்றும் சிம்பு படங்களை தயாரித்து வரும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிப்ரவரி முதல் வாரம் சிம்பு படத்தின் அப்டேட்டையும் இரண்டாவது வாரம் சூர்யா படத்தின் அப்டேட்டையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இந்தநிலையில் நாளை அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு பிறந்த நாளில் ’பத்து தல’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்று கூறப்படுகின்றது.
இதனை அடுத்த பிப்ரவரி இரண்டாவது வாரம் சூர்யாவின் ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ‘சூர்யா 42’ படத்தை விரைவில் வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.