வம்சி இயக்கத்தில் தில் ராஜீ தயாரிப்பில் விஜய் நடித்த “வாரிசு” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அம்மா, அப்பா மற்றும் கூட்டு குடும்பம் செண்டிமெண்ட் கொண்ட ஒரு கதையம்சம் கொண்ட படமாக இது உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பெற்று இருக்கிறது வாரிசு.
இந்நிலையில் வாரிசு படம் வரும் பிப்ரவரி 22ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தற்போது அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
