பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த விழாவில் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உட்பட படக் குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியான வீடியோவில் ’எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் தான் வாழ்க்கை அதுதான் உண்மை, என் எண்ணம் என் ரசிகர்களின் மீது, அவர்கள் தான் என் வாழ்க்கை’ என்ற ஆடியோ உடன் கூடிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் தனுஷ், சம்யுக்தா , சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்த ஆண்டின் முதல் வெற்றி படமாக தனுஷ்க்கு இருக்கும் என்று கூறப்படுகின்றது.