நேற்று மாலை முதல் தளபதி விஜய் நடித்துவரும் ’தளபதி 67’ படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி வந்துகொண்டுள்ளன. இதன் காரணமாக ’தளபதி 67’ ஹேஷ்டேக் நேற்று முதல் டிரெண்ட் ஆகி வருகிறது.

‘தளபதி 67’ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டாக இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் விஜய், த்ரிஷா உள்பட இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவரும் உள்ளனர்.
மேலும் ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோ ரசிகர்களுக்கு செம விருந்தாக உள்ளது என்பதுடன் இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர்.