கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’பையா’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. கார்த்தி மற்றும் தமன்னா நடித்த இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். ஆனால் இரண்டாம் பாகத்தில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் இல்லை என்றும் அதற்கு பதிலாக புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
’பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா ஹீரோவாகவும் ஜான்விகபூரை நாயகியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது உண்மை என்றால் ஜான்விகபூர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவார் என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் ’பையா 2’ படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.