சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. இதுவரை இல்லாத அளவில் 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை திரையுலகில் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் தற்போது வரலாற்று சம்பவங்கள் குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த காட்சிகளுக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துவருகிறார். இந்த நிலையில் ’சீதாராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்குர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும்,அவர் பிளாஷ்பேக் வரலாற்று சம்பந்தமான காட்சிகளில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ’சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்குர் நடிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து ’சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்குர் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.