லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று ’தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்கும் எட்டு நட்சத்திரங்களின் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் அறிவிப்பு இன்றும் தொடரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் த்ரிஷா இந்த படத்தில் இணைந்திருப்பதை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து ‘கில்லி’, ’திருப்பாச்சி’, ’ஆதி’ மற்றும் ’குருவி’ ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் மீண்டும்14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படக்குழுவினர் இதற்கு முன் விஜய், த்ரிஷா நடித்த படங்களின் காட்சிகளை வீடியோவாக தொகுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தளபதி 67 படத்தில் இணைவது குறித்து த்ரிஷா கூறியதாவது: எனக்குப் பிடித்த குழுவினர் மற்றும் அபாரமான திறமையான குழுவில் நானும் ஒரு பகுதியாக இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இனி வரும் காலங்கள் உற்சாகமானது’ என்று தெரிவித்துள்ளார்.