காஜல் அகர்வாலின் மாறுபட்ட நடிப்பில் ”கருங்காப்பியம்” ட்ரைலர்!!

திரையுலகில் பிரபல நடிகை காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடித்த ’கருங்காப்பியம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது.

Kajal agarwal, Rejina, Yogibabu, Karunkappiyam, 31th Jan 2023

தமிழ் திரை உலகில் மீண்டும் திரில் கதை அம்சம் கொண்ட பேய் படங்கள் வர தொடங்கிவிட்ட நிலையில் தற்போது உருவாகியுள்ள ’கருங்காப்பியம்’ என்ற திரைப்படமும் அமானுஷ்ய சக்தியை கொண்ட கதை அம்சம் கொண்டதுடன் ‘கருங்காப்பியம்’ என்ற புத்தகத்தில் அடுத்து வரும் 100 வருடத்தை கணித்து எழுதி உள்ள நிலையில் அதில் குறிப்பிட்டபடி நடக்கிறதா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிகிறது.

Kajal agarwal, Rejina, Yogibabu, Karunkappiyam, 31th Jan 2023

முழுக்க முழுக்க திரில் காட்சிகள் கொண்ட இந்தப்படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன், கலையரசன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாத் இசையில், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை கார்த்திகேயன் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.